அதிக சத்துள்ள விலை மலிவான 5 நட்ஸ் [Top 5 Nuts With High Nutrients In Low Cost]

அதிக சத்துள்ள விலை மலிவான 5 நட்ஸ் [Top 5 Nuts With High Nutrients In Low Cost]

1.வேர்க்கடலை:
வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு உடலுக்கு தேவையான புரதம் போரான் மெக்னீசியம் விட்டமின் ஏ போலிக் ஆசிட் வைட்டமின் பி3 மற்றும் நைட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இது இளமையை பராமரிப்பு சருமத்தை பாதுகாக்கும் ஞாபகசக்தி அதிகரிக்கும் மன அழுத்தம் குணமாகும் இதில் உள்ள நல்ல கொழுப்பு உடல் எடையை குறைக்க உதவுகிறது அதனால் உடல் பருமன் உள்ளவர்கள் வேர்கடலை சாப்பிட்டு வர உடல் எடை குறையும் நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிக அளவில் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது வேர்க் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை பலப்படும்.2.கொண்டைகடலை: கொண்டைக்கடலை இரண்டு வகைகள் உண்டு 1 வெள்ளை கொண்டைக்கடலை 2 கருப்பு கொண்டை கடலை. இதில் கருப்பு கொண்டைக்கடலை இதுதான் சத்துக்கள் அதிகம். இதில் இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது தொடர்ச்சியாக கொண்டைக்கடலை சாப்பிட்டு வர இரத்த சோகை பிரச்சினை வராமல் தடுக்கும்.
3.சோயாபீன்ஸ்:
அசைவ உணவில் தான் புரதம் அதிக அளவில் இருக்கிறது என்பது பலரின் கருத்து.
அசைவ உணவுகளுக்கு நிகரான புரதச்சத்து கொண்ட ஒரே உணவு என்று சொன்னால் அது சோயாபீன்ஸ் தான். 5 லிட்டர் பசும்பாலில் உள்ள புரதம் ஒரு கிலோ மாமிசத்தில் உள்ள புரதம் 24 நாட்டுக் கோழி முட்டைகளுக்கு சமமான புரதம் கொண்ட ஒரே சிறுதானியம் இந்த சோயா பீன்ஸ் தான் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு உண்டு சோயா பீன்ஸில் உள்ள நல்ல கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கிறது. மற்ற தானியங்களில் இல்லாத அளவிற்கு 240 மில்லிகிராம் கால்சியம் 690 மில்லிகிராம் பாஸ்பரஸ் சத்தும் இந்த சோயாவில் உள்ளது இந்த இரண்டு சக்திகளும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அவசியம் தேவையான சத்துக்கள் அதனால் இந்த சோயா பீன்ஸை சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்.4.உலர் திராட்சை : உலர் திராட்சையில் அத்தியாவசிய சத்துக்களான மெக்னீசியம் பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் இருக்கிறது. உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவதே சிறந்தது. தினமும் 10 லிருந்து 20 உலர் திராட்சையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் ஊறிய உலர்திராட்சையை நீருடன் சேர்த்து பருகி வர உடலில் உள்ள பல பிரச்சனைகள் குணமாகும். நீரில் ஊற வைத்த உலர்திராட்சையை சாப்பிட்டு வர உடலில் உள்ள புற்றுநோய் காரணிகள் அளிக்கப்படும். ரத்தசோகை குணமாகும்.

5.பேரிச்சை : பேரீச்சையில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து ரத்த சோகை அதாவது அனீமியாவை குணமாக்கும். புதிய இரத்த செல்களை உருவாக்கி ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள ரத்த அளவு சீராக இருக்கும். ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு பேரிச்சை சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். இதில் உள்ள கால்சியம் மெக்னீசியம் மாங்கனீஸ் மற்றும் செலினியம் போன்ற நுண்ணிய சத்துக்கள் எலும்புகளை வலுவாக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் இதை அவசியம் சாப்பிட வேண்டும். முதிர் வயதில் ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து கண்பார்வையை தெளிவுபடுத்தும். தினமும் ஒன்று முதல் இரண்டு பேரிச்சை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *