ஊரடங்கில் தளர்வு இன்று முதல் எவை செயல்படும்? [22-04-2020]

ஊரடங்கில் தளர்வு இன்று முதல் எவை செயல்படும்? [22-04-2020]

ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20 ம் தேதி முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி,

விவசாயம், பண்ணைத்தொழில், தோட்டக்கலை, விளை பொருள் கொள் முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்படலாம்.

பிளம்பர், எலக்ட்ரீசியன், தச்சு வேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறு குறு தொழில் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம். கனரக பழுது பட்டறைகள், கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவும் நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐ. டி. நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்.
இந்த தளர்வுகள் கெரோனா அதிகம் உள்ள பகுதிகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொது போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், திரை அரங்குகள், வணிக வளாகங்களுக்கு தடை தொடர்கிறது.

புதிய கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்துள்ளது.
அவசர தேவைக்காக நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் பின்புற இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதி என்றும் இரு சக்கர வாகனம் என்றால் ஒருவர் மட்டுமே, அதாவது ஓட்டுநர் ம‌ட்டுமே செல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *