தென்னிந்திய திரை உலகில் முன்னனி நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால், நயன்தாரா, தமன்னா, திரிஷா ஆகியவர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முன்னனி நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால், நயன்தாரா, தமன்னா, திரிஷா ஆகியவர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இவர்களின் புதிய சம்பள விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா முன்னணி நடிகர்களின் ஜோடியாகவும், தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

1.நயன்தாரா : திரை உலகில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா தனது சம்பளத்தை 4 கோடியில் இருந்து 5 கோடியாக பெற்றுள்ளார்
அவரது கடைசி படம் தர்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. தமன்னா : நடிகை தமன்னா ஒரு படத்துக்கு ரூ.2.50 கோடி கேட்கிறாராம். அவரது நடிப்பில் சமீபத்தில் “ஆக்‌ஷன்” படம் வெளி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3. அனுஷ்கா : நடிகை அனுஷ்கா ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளமாக பெறுகிறார்.

4. காஜல் அகர்வால் : நடிகை காஜல் அகர்வால் உலக நாயகன் கமல்ஹாசனுடன் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார். இவரது சம்பளம் ரூ.1.50 கோடி சம்பளம் நிர்ணயித்துள்ளார்.

5. சமந்தா : நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சமீப காலங்களில் அவர் நடித்த படங்கள் நல்ல வசூல் பார்த்தது. இவர் ஒரு படத்துக்கு ரூ.2.50 கோடி வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

6. திரிஷா : நடிகை திரிஷா தமிழில் அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் நடித்த “96” படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவர் ரூ.1 கோடி சம்பளமாக பெறுகிறார்.

7. கீர்த்தி சுரேஷ் : நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு படத்துக்கு ரூ. 1 கோடி சம்பளமாக பெறுகிறார்.

8. ஹன்சிகா மோத்வானி : நடிகை ஹன்சிகா மோத்வானி ஒரு படத்துக்கு ரூ.75 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

9.ஐஸ்வர்யா ராஜேஷ் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படத்துக்கு ரூ. 75 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

10. ராஷ்மிகா மந்தனா : ராஷ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு ரூ.75 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *