ஹைட்ராக்சி குளோரோகுயினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்!!!

கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை கொடுத்தால் மிகவும் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு முகமை எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுவதைப் போல நோயாளிகளுக்கு குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை வேறு மருந்துகளுடன் சேர்த்து கொடுத்தால் இதயத்துடிப்புகள் தாறுமாறாகி மரணம் வரை சம்பவிக்கும் என அறிக்கை ஒன்றில் இந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வாரம் அமெரிக்காவில் நோயாளிகள் 368 பேருக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும் ஆன்டி பயாடிக் மருந்தான அசித்ரோமைசின் இரண்டையும் கொடுத்ததில் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் ஏற்பட்டதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *