கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு??

கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

ரமலான் நோன்பில் உள்ளவர்களுக்கும் இதர நோயாளிகளுக்கும் என உணவு பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டு வருகின்றன.

?? ரமலான் நோன்பு இருப்போருக்கு அதிகாலை 4 மணிக்கு ரொட்டி மற்றும் பிஸ்கட்டும் 4 : 30 மணிக்கு கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது. நோன்பு முடித்த பிறகு இரவு 7 மணி அளவில் பால் மற்றும் வாழைப்பழம் வழங்கப்படுகிறது. இரவு உணவாக 9 : 30 மணி அளவில் சாதம், சாம்பார், ரசம், பொரியல் மற்றும் முட்டையும் பின்பு உறங்கச் செல்லும் முன் இரவு 10 மணியளவில் சிறிதளவு பூண்டுடன் பால் வழங்கப்படுகிறது.

சிகிச்சையில் மற்ற நோயாளிகளுக்கு காலை 7 மணி அளவில் காபி மற்றும் பிஸ்கட் 8 :30 மணி அளவில் காலை உணவாக இட்லி மற்றும் சாம்பார் வழங்கப்படுகிறது. காலை உணவிற்கு பின்பு 10 மணி அளவில் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. பின்னர் காலை 11 மணி அளவில் வேகவைத்த சுண்டல், வேர்க்கடலை மற்றும் சர்க்கரை அல்லது உப்புக் கலந்த எலுமிச்சை சாறும் வழங்கப்படுகிறது. மதிய உணவாக 1 மணியளவில் சாதம், சாம்பார், ரசம், முட்டை, பொரியல் மற்றும் தயிர் சாதம் வழங்கப்படுகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் காரக்குழம்பும் கொடுக்கப்படுகிறது. மாலை சிற்றுண்டியாக 4 மணி அளவில் காபி மற்றும் பிஸ்கட்டும் 7 : 30 மணி அளவில் வாழைப்பழம் வழங்கப்படுகிறது. இரவு உணவாக 8 மணிக்கு சாதம், சாம்பார், ரசம் மற்றும் பொரியல் வழங்கப்படுகிறது. தூங்கச் செல்வதற்கு முன்பாக 10 மணியளவில் சிறிதளவு பூண்டுடன் பால் வழங்கப்படுகிறது. கபசுர குடிநீர் வழங்கப்படும் அளவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு 30 மில்லி லிட்டரும் பெரியவர்களுக்கு 60 மில்லி லிட்டர் கபசுரக் குடிநீரும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *