செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று மேலு‌ம் 138 பேருக்கு கொரோனா – மாவட்ட வாரியாக விவரம்

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று மேலு‌ம் 138 பேருக்கு கொரோனா – மாவட்ட வாரியாக விவரம்தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் இன்று 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த எண்ணிக்கை இன்று 161 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் தலா 5 பேரும் காஞ்சிபுரம் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் இருவருக்கும் அரியலூர் கடலூர் ராணிப்பேட்டை சேலம் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்களில் சென்னையில் 906 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னையில் கடந்த 6 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது. கோவையில் 141 பேரும் திருப்பூரில் 112 பேரும் மதுரையில் 84 பேரும் திண்டுக்கல்லில் 80 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட 161 பேரில் ஆண்கள் 97 பேரும் பெண்கள் 64 பேரும் ஆவர். தமிழகத்தில் இன்று மட்டும் 9643 நபர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இதுவரை 110718 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 48 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 1258 பேர் தமிழகத்தில் குணமடைந்துள்ளனர். இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை.

வயது அடிப்படையில் பார்க்கும்போது 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் 142 பேரும் 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டோரில் 1929 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 252 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை கூறி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *