வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் நலமுடன் இருக்கிறார் – தென்கொரியா

வடகொரியாவின் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார் என தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ற்கு இம்மாத தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதன்பிறகு அவரது உடல்நலம் மோசமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் அவரது உடல் நலம் குறித்து அதிக வடகொரியாவுக்கு சீனா மருத்துவ நிபுணர்களை அனுப்பியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கிங்ஜாங் உன் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார் என தென் கொரிய அதிபர் மூன் ஜேயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மூன் சுங் இன் தெரிவித்தார். கடந்த 13 ம் தேதியிலிருந்து வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வான்சன் நகரில் கிங் தங்கி இருப்பதாகவும் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான அசைவுகள் எதுவும் தென் படவில்லை என்றும் மூன் சுங் இன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *